மகப்பேறு மருத்துவ அலுவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

கோவை : மாவட்ட அளவிலான குடும்பநல அறுவை சிகிச்சையில் தர நிர்ணயம் மற்றும் நிலைப்படுத்தல் படித்த மகப்பேறு மருத்துவ அலுவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தொடங்கி வைத்தார்.

கோவை : மாவட்ட அளவிலான குடும்பநல அறுவை சிகிச்சையில் தர நிர்ணயம் மற்றும் நிலைப்படுத்தல் படித்த மகப்பேறு மருத்துவ அலுவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று மாவட்ட அளவிலான குடும்பநல அறுவை சிகிச்சையில் தர நிர்ணயம் மற்றும் நிலைப்படுத்தல் படித்த மகப்பேறு மருத்துவ அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள்) கிருஷ்ணா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி பேசுகையில், "தமிழகத்தின் அனைத்து பகுதியிலுள்ள மக்களுக்கும் உயர் தரமான சிகிச்சை அளித்திட வேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறைக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து அரசு மருத்துவமனைகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக நவீனப்படுத்தி வருகின்றது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது, கட்டமைப்பு வசதிகள், உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்கள், நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் என அனைத்திலும் தன்னிறைவு பெற்று எதிர்பார்ப்புக்கும் மேலான சிகிச்சைகளை வழங்கி வருகின்றது.

மேலும், தனியார் மருத்துவமனைகளும் தங்களால் குணப்படுத்த இயலவில்லை என்று தெரிவிக்கப்படும் நோயாளிகளுக்கும், தரமான சிகிச்சை வழங்கி அவர்களை ஆரோக்கிய வாழ்விற்கு திரும்ப அளித்து வருவது பாராட்டுதலுக்குரியது இத்தகைய சிறப்புகளால் கோவை மருத்துவ நகரமாகவும், அண்டை மாவட்டங்களுக்கும், சிறந்த மருத்துவ சேவையை வழங்கும் ஒரு மருத்து மையமாக கோவை மாவட்டம் திகழ்ந்து வருகின்றது. மருத்துவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்கள் தேவைகள் நாடி வரும் நோயாளிகளின் நோய்களை நிவர்த்தி செய்வது தங்கள் தலையாய கடமை என்பதைக் கருத்தில் கொண்டு, சிரமேற்கொண்டு பணியாற்றிட வேண்டும் நேரம் பாராமல் உழைக்க வேண்டும்.

மற்ற பணிகளைக் காட்டிலும் மருத்துவத்துறையில் கவனக் குறைவு என்பது துளியளவும் இருக்கக் கூடாது. மருத்துவப் பணி என்பது உயிர், உணர்வு, உறவுகள் சார்ந்தது. எனவே, அனைத்து தரப்பு மக்களும் மருத்துவமனை செல்வது என்பது தங்களையும் தங்கள் உறவுகளை காப்பாற்றவும், அவர்களின் நோய்களை தீர்க்கவுமே, இதனால் அவர்களுக்கு கவனமுடன் சிகிச்சை அளித்திடல் வேண்டும். மருத்துவப் பணிகளில் தவறைத் திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பு குறைவு. எனவே, தவறு நிகழாமல் அனைத்து மருத்துவர்களும் செயல்பட வேண்டும். உயர்ந்த வசதிகளை அரசு வழங்கும் நோக்கம் ஏழை, எளியோர்களும், சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களும், உயர் மருத்துவ சேவையினை பெற வேண்டும் என்பதே. 

அனைத்து அரசு பணிகளும், சேவை சார்ந்தது என்று அனைத்து அலுவலர்களும் தெரிவித்தாலும் முழுநேர அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் உன்னத பணியினை மேற்கொள்ளுபவர்கள் மருத்துவர்கள் ஆவார்கள். இங்கு வருகை புரிந்துள்ள மருத்துவர்கள் அனைவருக்கும் இப்பயிற்சி முகாம் மிக பயனுள்ளதாக அமையும். குடும்ப நல அறுவை சிகிச்சை என்பது நாட்டிற்காகவும், நாட்டின் நலனுக்காகவும் செய்வது இல்லை. அது அவர்களின் குடும்ப வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் சிகிச்சை என்பதை மருத்துவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். தொடக்கநிலை மருத்துவர்களான ஆரம்ப சுகாதார நிலையம் இதர கிராமப்புற மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தங்களிடம் சிகிச்சைக்காக வரும் பொதுமக்களிடம் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயர் தர சிகிச்சைகள் உள்ளது என்பதை கிராமப்புற மக்களுக்கும் தெரிவித்தால்தான் அதிகளவிலான பயனாளிகளுக்கு இந்த உயர் சிகிச்சைகள் சென்றடையும். அதிகளவில் பொதுமக்கள் பயனடைவார்கள், என மாவட்ட ஆட்சியர் கூறினார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...