கோவையில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக மூவர் கைது செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கோவை : கோவையில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நாளை மதியம் ஒரு மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோவை : கோவையில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நாளை மதியம் ஒரு மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாகவும், கோவையில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் கோவையைச் சேர்ந்த முகமது உசேன், ஷாஜகான் மற்றும் ஷேக் சபிபுல்லா ஆகிய 3 பேர் யு.ஏ.பி.ஏ. சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மூவரையும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போத்தனூர் போலீசார் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சக்திவேல் முன்னிலையில் இன்று மதியம் 3 மணிக்கு விசாரணைக்கு வந்த போது, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். பின்னர், விசாரணை தொடங்கிய நீதிபதி, எதிர்தரப்பு அவகாசம் கேட்டதால் நாளை மதியம் வழக்கு விசாரணை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார். 

கடந்த 13-ம் தேதி கோவை மாநகர காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிகாலையில் இருந்தே முகமது உசேன், ஷாஜகான் மற்றும் ஷேக் சபிபுல்லா ஆகியோர் இல்லங்களில் விசாரணை மற்றும் ஆய்வு நடத்தினர். அதன்பின்னர், மூன்று பேரையும் போலீஸ் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து 2 நாள் விசாரித்த போலீசார், அவர்கள் மீது சட்டவிரோத தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...