உதகையில் சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

நீலகிரி : போதைப்பொருட்கள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா தலைமையில் உதகையில் பேரணி நடைபெற்றது.

நீலகிரி : போதைப்பொருட்கள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா தலைமையில் உதகையில் பேரணி நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் போதைப் பொருட்களை அறவே ஒழிப்போம் என கோஷங்களை எழுப்பி முக்கிய சாலைகள் வழியாக அரசு தாவரவியல் பூங்கா அருகில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையம் வரை பேரணியில் கலந்து கொண்டனர்.



தொடர்ந்து, பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் வைக்கப்பட்ட போதை விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த போதை விழிப்புணர்வு படங்களை மாணவ, மாணவிகள் பார்த்து சென்றனர். 

பின்பு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலான குறும்படமும், போதைக்கு அடிமையாகக் கூடாது என்பதன் குறும்படமும் திரையிடப்பட்டது. இதில், ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு இந்த குறும்படங்களை விழிப்புணர்வு நோக்கத்துடன் கண்டு ரசித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...