திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் குளத்துபுதூர் பகுதியைச் சேர்ந்த மணித்துரை என்பவர் தாய்லாந்து நாட்டில் கொத்தடிமையாக உள்ளதாகவும், அவரை மீட்டு தரக்கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் அவரது தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

குளத்துபுதூர் பகுதியில் வசித்து வருபவர் மாரியம்மாள். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்த வருடம் ஜனவரி மாதம் மூத்த மகன் மணித்துரை மற்றும் இரண்டாவது மகன் மணிகண்டன் ஆகியோரை அவிநாசி பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்ற ஏஜெண்ட் தாய்லாந்து நாட்டில் பனியன் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் தலா 2 லட்சத்து 70 ஆயிரம் ருபாய் பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், வொர்க் விசா, பெர்மிட் கார்டு போன்றவைகளை எடுத்து தராமல், அங்கு ஓட்டல் வேலையில் சேர்த்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஓட்டலில் முறையான சம்பளம் எதுவும் தராமல் கொத்தடிமையாக வேலை வாங்கி வந்துள்ளனர். மேலும், வொர்க் விசா, பெர்மிட் கார்டு போன்றவை இல்லாததாலும், அவர்களால் அங்கு வேலை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சகோதரர்கள் இருவரையும் ஒரே இடத்தில் வேலைக்கு வைக்காமல் இரு வெவ்வேறு இடங்களில் தங்கி வேலை பார்க்கும்படி செய்துள்ளனர். இந்த நிலையில், இரண்டாவது மகனான மணிகண்டனை இங்கு கூட்டி வர 58 ஆயிரம் ரூபாய் கூடுதல் பணம் கொடுத்ததால், இவரின் உரிமையாளர் மணிகண்டனை இந்த மாதம் தமிழகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டார். ஆனால், மூத்த மகன் மணித்துரையை சொந்த ஊருக்கு அனுப்ப அவருடைய உரிமையாளர் மறுப்பதாகவும், தனது மகனை கொத்தடிமையாக வைத்து வேலை வாங்கி வருவதாகவும் கூறுகிறார் மாரியம்மாள்.
இந்த நிலையில், தனது மகனை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் பழனிசாமியிடம் தாய் மாரியம்மாள் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார். இதனிடையே, மாரியம்மாளின் மகன் மணித்துரையை தாய்லாந்து நாட்டில் இருந்து மீட்டு இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட் செய்துள்ளார்.

மகனை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் கூறியது ஒரு வகையில் ஆறுதல் அளித்தாலும், விரைவில் அவரை மீட்டு கொண்டு வர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.