கோவை : திருப்பூர் அருகே பல தலைமுறைகளாக இறந்தவர்களை அடக்கம் செய்து வந்த சுடுகாட்டை உரக்கிடங்காக அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருப்பூரையடுத்த பெரிச்சிபாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அருந்ததியர் குடியிருப்பு பகுதி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இக்குடியிருப்பு பகுதியின் அருகிலேயே இறந்தவர்களை அடக்கம் செய்யும் சுடுகாடாக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மூன்று தலைமுறைகளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சுடுகாடு அமைந்துள்ள இடத்தில் உரக்கிடங்கு அமைக்கும் முயற்சியில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது இதனை அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அப்போது, தலைமுறை தலைமுறையாக இறந்தோரை அடக்கம் செய்து, வருடாவருடம் அவ்விடத்தில் வழிபாடும் செய்து வருவதாகக் கூறிய பொதுமக்கள், உரக்கிடங்கு அமைக்கும் முயற்சியை கைவிட்டு வேறு இடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.