கோவை : கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போத்தனூர் போலீசார் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கையில் தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கும், கேரளா மற்றும் கோவையில் உள்ள சில இளைஞர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதன்பேரில், தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பிருப்பதாக அன்பு நகரைச் சேர்ந்த ஷாஜகான், கரும்பு கடையைச் சேர்ந்த ஹபியுபுல்லா, வின்சென்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த முகமது உசேன், ஆகியோரை கைது செய்யப்பட்டனர். மேலும், கோவையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டிருப்பதாக விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, இவர்கள் 3 பேர் மீதும் யு.ஏ.பி.ஏ. சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர், கைது செய்யப்பட்ட மூவரும் கோவை மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஷாஜகான், ஹபியுபுல்லா மற்றும் முகமது உசேன் ஆகியோரை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போத்தனூர் காவல்துறையினர் சார்பில் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, மூவரையும் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டார்.