கோவை : கருவூல துறையை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோவையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருவூல துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மதிய இடைவெளியின் போது கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள், கருவூல துறையை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்றும், போதிய வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மாவட்ட தலைவர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து மாவட்ட தலைவர் செந்தில் குமார் கூறுகையில், "கருவூல துறையை தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு திட்டங்கள் நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுவரை என்.ஐ.சி. முறையாக பணிகளை செய்து வந்துள்ளது. அவர்களுக்கு போதிய வசதி செய்து கொடுத்து இருந்தால், இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருப்பார்கள். தனியாரிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. பணியாளர்களின் டேட்டாக்களை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது," எனத் தெரிவித்தார்.