உதகையில் ஆட்டோக்களை இயக்குவதில் பாரபட்சம் : வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை கோரும் ஆட்டோ ஓட்டுநர்கள்

நீலகிரி : உதகையில் ஆட்டோக்கள் இயக்குவதில் பாரபாட்சம் காட்டுவதால், வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்துடன் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி : உதகையில் ஆட்டோக்கள் இயக்குவதில் பாரபாட்சம் காட்டுவதால், வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்துடன் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

உதகை நகரில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் ஆட்டோ ரிக்ஷாக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து, உதகை நகரப் பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்க்ஹில் பகுதியில் சுமார் 12 ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளனர். நகரப் பகுதியில் இருந்து இப்பகுதிக்கு செல்லக்கூடிய இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 90 ரூபாய் முதல் அதிகபட்சம் 100 ரூபாய் வரை எல்க்ஹில் பகுதிக்கு வாடகைக்கு சென்று வருகின்றனர்.



இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் எல்க்ஹில் பகுதியில் இருந்து நகர்ப்பகுதிக்கு வரும் எந்தவொரு வாடகையையும் எடுக்கக் கூடாது என எல்க்ஹில் பகுதி ஆட்டோ ஓட்டுநர்களை நகரப்பகுதியில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மிரட்டியுள்ளனர். மேலும், எல்க்ஹில் பகுதியில் தனியாக ஆட்டோ ஸ்டேண்ட் போடக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், எல்க்ஹில் பகுதியில் இருந்து வாடகைக்கு ஆட்டோ ஓட்டும் ஓட்டுநர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். 



எனவே, ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரங்கள் நகரப் பகுதியில் இருந்து வாடகை எடுத்துச் செல்வதில் தான் இருக்கிறது எனக் கூறி, இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என எல்க்ஹில் பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...