கோவை : மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் டெம்போவும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேவாங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். கூலி தொழிலாளியான இவர் கருவேப்பிலை வெட்டும் தொழிலுக்கு சென்று வருகிறார். இன்று வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டு மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் தேரம்பாளையம் அருகே வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்குள்ள சாலை வளைவில் வாகனத்தை தங்கராஜ் திருப்பிய போது, எதிரே வெங்காயம் ஏற்றி வந்த டெம்போவின் பக்கவாட்டில் மோதினார். இதில், தலைப்பகுதியில் பலத்த காயம் அடைந்த தங்கராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போக்குவரத்து விதிகளை மதிக்காமல், தலைக்கவசம் அணியாததால் இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த தங்கராஜ் உயிரிழக்க நேரிட்டது. விபத்து குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இருசக்கர வாகனங்களில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.