ரூ. 10 நாணயம் குறித்த சுற்றறிக்கை அனுப்பிய விவகாரம் : திருப்பூர் கிளை மேலாளர் தற்காலிக பணிநீக்கம்

திருப்பூர் : நிர்வாகத்தின் அனுமதியின்றி அரசுப் பேருந்துகளில் பணிபுரியும் நடத்துநர்களுக்கு ரூ. 10 நாணயத்தை தவிர்க்குமாறு சுற்றறிக்கை அனுப்பிய திருப்பூர்-2 கிளை மேலாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.


திருப்பூர் : நிர்வாகத்தின் அனுமதியின்றி அரசுப் பேருந்துகளில் பணிபுரியும் நடத்துநர்களுக்கு ரூ. 10 நாணயத்தை தவிர்க்குமாறு சுற்றறிக்கை அனுப்பிய திருப்பூர்-2 கிளை மேலாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை, திருப்பூர் மண்டலம், திருப்பூர் -2 கிளையில் பணிபுரியும் கிளை மேலாளர் என். தனபால், நிர்வாகத்திடம் முன் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக, அவரது பணிமனைக்குத் தொடர்புடைய பேருந்துகளில் பணிபுரியும் நடத்துநர்களுக்கு ரூ. 10 நாணயத்தை தவிர்க்குமாறு எழுத்துப் பூர்வமாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

இதுபோன்ற ஒரு சுற்றறிக்கை, நிர்வாகத்திடம் எந்த ஒப்புதலும் பெறாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு பொதுமக்களிடம் போக்குவரத்துக் கழகத்திற்கு அவப்பேர் ஏற்படுத்துகின்ற வகையில் நடந்து கொண்டுள்ளார். எனவே, இந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதோடு, இதற்குக் காரணமாக இருந்த திருப்பூர்-2 கிளை மேலாளர் என். தனபால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...