நாங்கூர் ஆய்வில் கி.மு. 3-ம் நூற்றாண்டு தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிப்பு

நாகை : தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல்துறை சார்பில் நாங்கூரில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கி.மு.3-ம் நூற்றாண்டை சார்ந்த தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நாகை : தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல்துறை சார்பில் நாங்கூரில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கி.மு.3-ம் நூற்றாண்டை சார்ந்த தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள நாங்கூரில் தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையின் இணைப் பேராசிரியர் செல்வகுமார் தலைமையில் பல்கலைக்கழக நல்கைக் குழுவின் நிதி உதவியுடன் அகழ்வாராய்ச்சி கடந்த மே 17-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கு பல்வேறு தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.

இது குறித்து பேராசிரியர் செல்வக்குமார் கூறுகையில், "நாங்கூர் ஒரு சங்ககால வாழ்விடமாகும். பட்டினப்பாலையிலும் பொருநராற்றுப்படையிலும் இவ்வூர் பெயர் இடம் பெற்றுள்ளது. கரிகாற்சோழன் நாங்கூர் வேளிற் பெண்ணை மணந்ததாகக் குறிப்பிடும் ஒரு செய்தியும் உள்ளது. தாய்லாந்தில் உள்ள தாக்குவா பகுதியில் கிடைத்த ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு, நாங்கூருடையான் என்பவர் அங்கு ஒரு குளம் வெட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதன் மூலம், அவர் நாங்கூர் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனத் தெரிகிறது.

மேலும், நாங்கூரைச் சுற்றி 11 வைணவ திவ்ய தேசத் தலங்கள் உள்ளன. இங்கு, பல சிவன் கோயில்களும் சோழர், பாண்டியர் கால கல்வெட்டுகளும் உள்ளன. அகழ்வாராய்ச்சியில் கறுப்பு சிவப்பு, கறுப்பு, சிவப்பு பானை வகைகளும், மீன் உருவம் பொறித்த பானையோட்டுக் கீறல் குறியீடுகள், இரும்புப் பொருள்கள் செய்யும் கொல்லர் பட்டறைகள், கூறை ஓடுகள், சுடுமண் பொம்மைகள், திருமால் உருவம் பொறித்த முத்திரைப் பதிவுகள், கண்ணாடி மணிகள், கல்மணிகள் போன்றவை கிடைத்துள்ளன. நாங்கூர் கி.மு.3-ம் நூற்றாண்டைச் சார்ந்த சங்ககால ஊர் என்பது உறுதியாகியுள்ளது. பிற்காலத்தில் திவ்யதேசங்களாகவும், தேவாரத்திருத்தலங்களாகவும் அறிய முடிகிறது" என்றார்.

தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன், தரங்கம்பாடி டேனிஷ் வரலாற்றை ஆராயும் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மார்க் ஹௌசெர் ஆகியோர் நாங்கூர் அகழாய்வு இடத்தைப் பார்வையிட்டனர். மேலும், பல முக்கிய வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...