கோவை : ஆனைகட்டி சாலையில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அங்குள்ள மதுபானக்கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கோவை : ஆனைகட்டி சாலையில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அங்குள்ள மதுபானக்கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஆனைகட்டி சாலையில் உள்ள ராமகிருஷ்ணா கிராம சுகாதார மையம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஒரு பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், எதிரே வந்து மோதிய இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து நடந்த பகுதியின் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது அருந்திக் கொண்டு வந்த இரு இளைஞர்களினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், விபத்திற்கு காரணமான டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மதுபோதையில் ஆனைகட்டி ஜம்பு கண்டி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, எண் -2222 என்ற மதுபான கடை தற்காலிகமாக மூடப்படுவதாக வடக்கு வட்டாட்சியர் அறிவித்துள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியருடன் கலந்து ஆலோசித்து கடையை நிரந்தரமாக வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.