கோவை - பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு : ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசார் நோட்டீஸ்

கோவை : கோவை – பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் குறிச்சி அருகே ஆக்கிரமிப்பு செய்வதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கினர்.

கோவை : கோவை – பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் குறிச்சி அருகே ஆக்கிரமிப்பு செய்வதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கினர். 



கோவை – பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது 30 அடியாக உள்ள சாலையை 50 அடியாக விரிவாக்கம் செய்ய சாலை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இந்த நிலையில், கோவை குறிச்சி குளம் அருகே உள்ள பொள்ளாச்சி சாலையின் ஓரங்களில் உள்ள பழைய இரும்பு கடை, கிரானைட் கடை, பழைய மர சாமான்கள் விற்கும் கடையினர் பொள்ளாச்சி சாலையை ஆக்கிரமித்து தங்கள் பொருட்களை சாலை ஓரங்களில் வைத்துள்ளனர். இதனால், அங்கு விபத்து ஏற்படுவதாகக் கூறப்பட்டது.



இந்த நிலையில், திடீரென போத்தனூர் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் குறிச்சி அருகே குவிக்கப்பட்டனர், பின்னர், சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கோரி நோட்டீஸ்களை வழங்கினர். மேலும், சாலையை ஆக்கிரமித்து பொருட்கள் வைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். தற்போது, 30 அடியாக உள்ள சாலையை ஆக்கிரமிப்புகள் அகற்றிய உடன் 50 அடியாக விரிவாக்கம் செய்யும் பணி துவங்க உள்ளது, மேலும், குறிச்சி குளம் அருகே புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான செயல் திட்ட பணிகளும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...