கோவை உள்பட மேற்கு மண்டலப் பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் இத்தனை சி.சி.டி.வி. கேமராக்களா..?

கோவை: மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் குற்றங்களை தடுப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் இந்த ஆண்டு காவல்துறையினரின் செயல்பாடு சிறப்பாக அமைந்துள்ளது.


கோவை: மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் குற்றங்களை தடுப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் இந்த ஆண்டு காவல்துறையினரின் செயல்பாடு சிறப்பாக அமைந்துள்ளதாக காவல்துறை தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கடந்த ஆண்டில் கொலை, பாலியல் பலாத்காரம், கலவரம், அடிதடி மற்றும் போஸ்கோ வழக்குகளின் கீழ் 2,397 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், இந்தாண்டு 2,283 ஆக குறைந்துள்ளது. கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் 2019-ம் ஆண்டு முதல் இந்த நாள் வரையில் 197 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. பாலியல் வழக்குகள் 2019-ம் ஆண்டு முதல் இதுவரையில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வரதட்சணை இறப்பு வழக்குகள் பொறுத்தவரையில் 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை 1 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு எந்தவித வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை. 

பெண்களுக்கு எதிராக 2019-ம் ஆண்டு முதல் இதுவரையில் 337 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போஸ்கோ வழக்குகள் பொறுத்தவரையில் 2019-ம் ஆண்டு இதுவரையில் 175 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவர வழக்குகளைப் பொறுத்தவரையில் 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரையில் 134 ஆக இருந்த கலவர வழக்குகள் 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரை 100 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 34 வழக்குகள் குறைவாகும். 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரையில் 1992 ஆக இருந்த அடிதடி வழக்குகள், 2019-ம் ஆண்டு முதல் இதுவரையில் 1,872 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 120 வழக்குகள் குறைவாகும். இவ்வாண்டு 73 குண்டர் தடுப்பு சட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 12,784 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மேற்கு மண்டலத்தைப் பொறுத்தவரையில் 2019-ம் ஆண்டு முதல் தற்போது 23,668 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, ஈரோடு மாவட்டத்தில் 8,702 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், குற்றவழக்குகளை எளிதில் அடையாளம் காண ஏதுவாக உள்ளது. 

மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களிலும் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மதுவிலக்கு வழக்குகள், சூதாட்ட வழக்குகள், கஞ்சா வழக்குகள் மற்றும் லாட்டரி வழக்குகள் பிடிக்கப்பட்டுள்ளன. 

லாட்டரி சட்ட வழக்குகள் 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரையில் 668 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுவிலக்கு சம்பந்தமான வழக்குகள் 2019-ம் ஆண்டு முதல் இதுவரையில் 15,464 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூதாட்ட வழக்குகளை பொறுத்தவரையில் 2019-ம் ஆண்டு இதுவரையில் 445 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகையிலை மற்றும் கஞ்சா தொடர்பான வழக்குகள் 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரையில் 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரையில் 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இது சென்ற ஆண்டைவிட 32 வழக்குகள் அதிகமாகும். மணல் கடத்தல் வழக்குகள் பொறுத்தவரை 2018-ம் ஆண்டு இதுவரையில் 194 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு முதல் தற்போது 267 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 73 வழக்குகள் அதிகமாகும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...