நீலகிரி : நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே ஒற்றை காட்டு யானை ஒன்று சாலையில் நடந்து கொண்டிருந்த முதியவரை துரத்திய சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை பகுதியில் சுற்றிலும் வனப்பகுதியில் நிறைந்துள்ளன. இதன் காரணமாக, பொது மக்களின் நடமாட்டம் மிகவும் குறைந்து காணப்படும். இந்த நிலையில், கடந்த 22-ம் தேதியன்று இப்பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை, அங்கு சாலையில் நடந்து கொண்டிருந்த அப்துல் காதர் என்ற முதியவரை துரத்தியது. இதில், அவர் நிலை தடுமாறி அங்கிருந்த கால்வாயில் விழுந்துள்ளார். காயம் பெரிதாக இல்லாததால் இவர் மருத்துவமனைக்கு செல்லாமல் வீ்ட்டிற்கு சென்று விட்டார். இதனால், யானை துரத்திய சம்பவம் பெரிய அளவில் வெளியே தெரியவில்லை.

இந்த நிலையில், தனியார் நிறுவனத்தின் சி.சி.டி.வி. கேமரா பதிவை இன்று பார்த்த போது கேமராவில் முதியவரை யானை துரத்தும் படக்காட்சி பதிவாகியுள்ளது. இதையடுத்து, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.