நீலகிரி : குன்னூரில் உள்ள ரேலியா அணையின் கொள்ளளவை அதிகரிக்க முடியாது என நீரஜ் மிட்டல் தலைமையில் குழு தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு ஏற்றுமதி துறை துணைத் தலைவர் நீரஜ் மிட்டல் தலைமையில் குழு ஒன்று நியமித்தது. இந்த குழுவானது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள எமரால்டு மற்றும் ரேலியா அணை உள்ளிட்ட நீர் ஆதாரங்களின் நிலை குறித்து ஆலோசனை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து, குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நகராட்சி, .பேரூராட்சி, ஊராட்சி, உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் நீரஜ் மிட்டல் கூறியதாவது :- நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ரேலியா அணையின் கொள்ளளவை அதிகரிக்க முடியாது. கூடுதலாக தடுப்பணை கட்டி தண்ணீரை சேமிக்க அரசுக்கு திட்ட மதிப்பீடு வழங்கப்பட உள்ளோம். மேலும், நீலகிரி மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை. தண்ணீர் விநியோகம் செய்யும் குழாய்கள் பழுதடைந்துள்ள காரணத்தினால், அவைகளை சீர்செய்ய 54 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படுவதோடு, தனியார் நிலத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும், எனத் தெரிவித்தார்.
இந்த திகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் செல்வராஜ், குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் சிங் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.