கோவை: கோவையில் திருமணம் ஆகாமல் தங்கும் ஆண்கள், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என விளம்பரம் செய்த ஒயோ நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது :- நவ இந்தியா பகுதியில் ஒயோ என்ற சர்வீஸ் அபார்ட்மெண்ட் இயங்கி வருகிறது. அந்நிறுவனம் திருமணம் ஆகாமல் தங்கும் ஆண்கள், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளனர். இது சட்டவிரோத செயல்களுக்கு துணை போகும் வகையில் இருக்கிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரிக்கக் காரணமாக அமையும் வகையில் இருக்கிறது. எனவே, அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், போராட்டம் நடத்தப்படும், என தெரிவித்தனர்.