நோய் தகவல்கள், நோய்க்கான காரணங்கள் மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை சம்பந்தப்பட்ட நோயாளிகளிடம் அளிக்க மருத்துவமனைகள் மறுப்பு தெரிவிக்கக் கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் நடைபெறுகிற முறைகேடுகள் பற்றி மத்திய அரசுக்கு ஏராளமான புகார்கள் செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்துதான், மருத்துவ நிறுவனங்களுக்கான தேசிய கவுன்சில். தனது 11-வது கூட்டத்தில் இந்த பரிந்துரைகள் பற்றி விவாதித்து, மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் பின்பற்றுவதற்காக அனுப்பப்பட்டுள்ளன.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் தயாரித்து அளித்துள்ள நோயாளிகளின் உரிமைகள் குறித்த வரைவு சாசனத்தின் அடிப்படையில் மருத்துவ நிறுவனங்களுக்கான தேசிய கவுன்சில் சில பரிந்துரைகள் அளித்துள்ளது. இந்த பரிந்துரைகளை (நோயாளிகளின் உரிமைகள்) மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுந்தன் வலியுறுத்தி உள்ளார். இதன் மூலம், நோயாளிகள் தங்கள் உரிமைகளை தெரிந்து கொண்டு, மருத்துவமனைகளிடம் இருந்து பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
நோயாளிகளின் உரிமைகள் என பட்டியலிடப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகள் வருமாறு :-
* எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் நோயாளியின் உடலை ஒப்படைக்க முடியாது என மருத்துவமனைகள் மறுக்கக்கூடாது.
* நோயாளிகள் பற்றிய தகவல்கள், நோய்க்கான காரணம், முன்மொழியப்பட்டுள்ள பரிசோதனைகள், அதன் மீதான கவனிப்பு, சிகிச்சையினால் எதிர்பார்க்கப்படுகிற பலன்கள், ஏற்பட வாய்ப்பு உள்ள சிக்கல்கள், எதிர்பார்க்கப்படும் செலவு போன்ற விவரங்களை நோயாளிகள், அவர்களது பிரதிநிதிகள் மருத்துவமனைகளிடம் பெற உரிமை உண்டு.
* நோயாளிகளுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் நோய் பற்றிய அசல் அல்லது நகல் ஆவணங்கள், கேஸ் ஆவணங்கள், பரிசோதனை அறிக்கைகள், விவரங்களுடன் கூடிய பில், ஒவ்வொரு சேவைக்கும், வசதிக்கும் விதிக்கப்படக் கூடிய கட்டண விவரங்கள் ஆகியவற்றை மருத்துவமனையிடம் இருந்து பெறுவதற்கு உரிமை உள்ளது.
* குறிப்பிட்ட பரிசோதனை அல்லது சிகிச்சைக்கு முன்னதாக நோயாளியிடம் மருத்துவமனையின் ஒப்புதல் பெற வேண்டும். எந்தவொரு பிரச்சினையிலும், இரண்டாவது கருத்து (செகண்ட் ஒபினியன்) பெறுவதற்கு நோயாளிகளுக்கு உரிமை உண்டு. இதற்கு தேவையான ஆவணங்கள், தகவல்களை எந்த கட்டணமும் இன்றி, தாமதம் இல்லாமல் மருத்துவமனைகள் வழங்க வேண்டும்.
* எல்லா நோயாளிகளுக்கும் அந்தரங்க உரிமைகள் உண்டு. நோயாளிகள் உடல்நிலை, சிகிச்சை பற்றிய விவரங்கள் ஆகியவற்றை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டிய கடமை மருத்துவர்களுக்கு உண்டு.
* ஒரு பெண் நோயாளியை ஆண் மருத்துவர் உடல் பரிசோதனை செய்கிறபோது உடன் இன்னொரு பெண்ணின் இருப்பை மருத்துவர் உறுதி செய்து கொள்ள வேண்டும். உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.