கோவை : விண்ணில் இருந்து கிடைக்கப்பெற்றதாகக் கூறப்பட்ட கல்லை ஆராய்ச்சிக்காக கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவரது வீட்டில் கடந்த 50 வருடமாக 5 கிலோ 900 கிராம் எடையுள்ள விண்கல் இருந்தது. சமூக வலைதளங்களில் தொடர்ந்து இதைப்பற்றி படித்ததன் அடிப்படையில், தன்னிடம் இருப்பது விண்கல் என்பதை அவர் உணர்ந்தார். இதையடுத்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த கல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறி, அந்த விண்கல்லை கோவை மாவட்ட ஆட்சியரிடம் லட்சுமி நாராயணன் இன்று ஒப்படைத்தார்.

"விண்கல் முக்கியத்துவம் என தெரியவந்ததையடுத்து, வான் இயல் துறை நாசா மற்றும் இஸ்ரோ சேர்ந்த மாணவர்களின் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி தேவைப்படும் என்பதாலும், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புவியியல் துறையில் ஒப்படைக்க வந்துள்ளேன்," என லட்சுமி நாராயணன் கூறினார்.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை என்பதால் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருப்பது வழக்கம். புகார் மனு அளிக்க வருபவர்கள் அனைவரும் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுவர். இந்த நிலையில், இன்று கல்லுடன் வந்தவரை பார்த்தவுடன் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர், போலீசார் விசாரித்து விண்கல் கொண்டு வந்தவரை உள்ளே அனுமதித்தனர்.