தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் : மேட்டுப்பாளையத்தில் குழாய் உடைப்பால் ஆறு போல பெருக்கெடுத்து ஓடி வீணாகும் குடிநீர்

கோவை : மேட்டுப்பாளையத்தில் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், குடி தண்ணீர் சாலையில் வீணாகியது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், குடி தண்ணீர் சாலையில் வீணாகியது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் கிராமங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. காரமடை பேரூராட்சிக்கு தேக்கம்பட்டி பகுதியில் தனி நீர் ஏற்றும் நிலையம் அமைக்கப்பட்டு நாள்தோறும் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சாலைகளின் ஓரங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு அதன் மூலம் அனைத்து வார்டுகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 



இந்த நிலையில், மேட்டுப்பாளையம் - கோவை சாலையானது விரிவாக்கப் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காரமடை அருகே டீச்சர்ஸ் காலனி பகுதியில் சாலைகளை விரிவுபடுத்த ஜே.சி.பி. உதவியுடன் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் சாலையின் ஓரம் குளிதோண்டிய போது, ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீரிட்டு சாலையில் ஓடியது. காரமடை பேரூராட்சிக்கு வழங்கப்படும் குடிநீர் சுமார் 3 மணி நேரமாக ஆறாக சாலையில் ஓடியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் ஓடியது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியதையடுத்து, தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்ட கேட்டபோது, "உடைப்பு பகுதியினை பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்," என தெரிவித்தனர். 

தமிழகமே தண்ணீருக்காக தவம் இருக்கும் நிலையில், அதிகாரிகளின் அலட்சியத்தால் சுமார் 3 மணி நேரம் குடிதண்ணீர் வீணானது பொதுமக்களை கவலையடையச் செய்துள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...