கோவை : மதுரையில் பிரபல ரவுடியை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி சூலூர் அருகே சாலை விபத்தில் பலியான நிலையில், அவருடன் வாகனத்தில் வந்து தப்பியோடிய அவரது சகோதரரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த மாதம் மதுரை பழங்காநத்தம் அடுத்த முத்துப்பட்டி பகுதியில் பிரபல ரவுடி சௌந்தரை 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி கழுத்தை வெட்டியது. மேலும், செளந்தரின் தலையை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் எடுத்துச் சென்று அங்குள்ள ரயிவே தண்டவாளம் அருகே வீசிவிட்டு தப்பிச் சென்றது. இந்த சம்பவம் மதுரை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய 5-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். ஆனால், முக்கிய குற்றவாளியான செல்வம் தலைமறைவாகிவிட்டதால், தனிப்படை அமைத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், செல்வம் தனது சகோதரர் சோனய் மற்றும் நண்பர் ஆகியோருடன் சூலூர் கண்ணம்பாளையம் அருகே அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த வாகனம் மோதியதில் மூன்று பேரும் காயமடைந்தனர். இதையடுத்து, இவர்களை அருகே உள்ளவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, செல்வம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பின்னர், செல்வத்தின் சகோதரர் காவல்துறைக்கு பயந்து தப்பியோடி விட்டார். மேலும், ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, செல்வத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்த தனது சகோதரரின் பிரேதத்தை வாங்க இன்று தேடப்பட்டு வரும் சோனய் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வரும்பொழுது போலீசார் அவரை கைது செய்வார்கள் என காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.