திருப்பூரில் மாசுபாட்டை ஏற்படுத்தும் ஆலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காலவரையற்ற காத்திருப்பு போராட்டம்

திருப்பூர் : திருப்பூர் அருகே பொது மக்களுக்கு இடையூறாகவும், மாசு ஏற்படுத்தி வரும் சாய ஆலைகள், பிரிண்டிங் நிறுவனங்கள் மற்றும் பாய்லர்கள் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சார்பில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

திருப்பூர் : திருப்பூர் அருகே பொது மக்களுக்கு இடையூறாகவும், மாசு ஏற்படுத்தி வரும் சாய ஆலைகள், பிரிண்டிங் நிறுவனங்கள் மற்றும் பாய்லர்கள் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சார்பில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைப்புதூர் பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அப்பகுதியை சுற்றியுள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறை நிறுவனங்கள், பிரிண்டிங் நிறுவனங்களும் சுத்திகரிக்கப்படாத ஜீரோ டிஸ்சார்ஜ் செய்யாத கழிவு நீரை கிணறு, போர் மற்றும் ஓடைகளில் வெளியேற்றுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், பாய்லர் நிறுவனங்களிலிருந்து கருப்பு துகள்கள் வெளியேற்றப்படுவதால், சுவாச கோளாறு போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 



எனவே, கரைப்புதூர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராகவும், நோய் பரப்பும் சாய ஆலை நிறுவனங்கள், பிரிண்டிங்.நிறுவனங்கள், பாய்லர் ஆலைகளை உடனடியாக மூட வலியுறுத்தி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தைக் கண்டித்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கரைப்புதூர் வாழைத்தோட்டம் பகுதியில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...