கோவையில் வீட்டில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த பெண்குழந்தை கிணற்றில் பிணமாக கிடந்த அதிர்ச்சி சம்பவம்

கோவை : விளாங்குறிச்சியில் வீட்டில் பெற்றோருடன் உறங்கி கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : விளாங்குறிச்சியில் வீட்டில் பெற்றோருடன் உறங்கி கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



அன்னூர் கரியகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் கனகராஜ் மற்றும் காஞ்சனா. இவர்கள் விளாங்குறிச்சியில் உள்ள குப்புராஜ் என்பவரது தோட்டத்தில் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் நேற்று இரவு வழக்கம் போல உணவருந்தி விட்டு உறங்கச் சென்று விட்டனர். மேலும், வீட்டிற்கு வந்த உறவினர்களும் வீட்டின் வெளியே கட்டிலில் படுத்து இருந்தனர்.



இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் நான்கரை மணியளவில் காஞ்சனா எழுந்து பார்த்தபோது, அருகில் படுத்திருந்த குழந்தையைக் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, பெற்றோர்கள் வீட்டின் முன்பு தனது குழந்தை விளையாடிக் கொண்டு இருக்கும் என தேடிப்பார்த்தனர். ஆனால், குழந்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.



பின்னர், வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் கருவேலங் காட்டுப்பகுதியில் தேடிய போது பாழடைந்த கிணற்றில் குழந்தை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே கிணற்றில் கயிற்றை கட்டி இறக்கி குழந்தையை தூக்கினர். குழந்தை மயங்கி இருப்பதாக நினைத்துத் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...