கோவை சிந்தி அமைப்பின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஒரே நாளில் 150 பேருக்கு இலவச பல் செட்டுகளை வழங்கி லிம்கா சாதனை

கோவை : கோவையில் சிந்தி அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 150 பேருக்கு இலவசமாக பொய் பல் செட்டுக்களை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் வழங்கினார். இந்த நிகழ்ச்சி லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.


கோவை : கோவையில் சிந்தி அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 150 பேருக்கு இலவசமாக பொய் பல் செட்டுக்களை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் வழங்கினார். இந்த நிகழ்ச்சி லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

ஒரு புன்னகையை இலவசமாக வழங்குவோம் என்ற நிகழ்ச்சியை கோவையை சேர்ந்த ‘சிந்தி போரம்’ அமைப்பு கோவை குஜராத்தி சமாஜ்ஜில் நேற்று நடத்தியது. சஞ்சாய் சப்ரியா தலைமையிலான சிந்தி போரம் அமைப்பு, மங்களூரை சேர்ந்த ஏ.பி. ஷெட்டி நினைவு பல் அறிவியல் நிறுவனம், ஆர்.வி. எஸ் மருந்து கல்லுாரி மற்றும் மருத்துவமனை ஆகியவை இணைந்து முகாமை நடத்தின. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் துவக்கி வைத்தார்.



பொதுவாக செயற்கையான ஒரு பல் செட் செய்ய 5 நாட்கள் ஆகும். ஆனால், முதல் முறையாக 150 பேருக்கு ஒரே நாளில் பற்கள் செய்ய அளவீடு செய்து, ஒரே நாளில் பொருத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். கோவை நகரில் பல்வேறு இடங்களில் 500 பேரை ஆராய்ந்து, பல் செட் பொருத்த தகுதியானவர்கள் 150 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பணியில், டாக்டர்கள், பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட 250 பேர் கொண்ட குழு 18 மணி நேரம் ஈடுபட்டது. இந்த சாதனை, லிம்கா புத்தகத்திலும் இடம் பிடித்தது.



கோவையைச் சேர்ந்த சிந்தி சமுதாய அமைப்பு நடத்திய இந்த முகாமிற்கு, பெங்களூரைச் சேர்ந்த ஏபி ஷெட்டி நினைவு பல் அறிவியல் நிறுவன பணியாளர்கள், ஆர்.வி.எஸ் மருந்து கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியவை தாமாக முன்வந்து உதவியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...