ஒரு நபர் அளிக்கும் தசை மற்றும் தோல் தானம் மூலம் 75 நபர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்

கோவை : ஒரு நபர் அளிக்கும் தசை மற்றும் தோல் தானம் 75 நபர்களின் வாழ்வில் மகிழ்ச்சியினை கொடுக்கிறது என கோவை கங்கா மருத்துவமனையின் கன்சல்டன்ட் ஆன்கோபிளாஸ்டிக் சர்ஜன் மற்றும் அஸ்த்தெடிக் சர்ஜன் ராஜா சண்முக கிருஷ்ணன் கூறினார்.

கோவை : ஒரு நபர் அளிக்கும் தசை மற்றும் தோல் தானம் 75 நபர்களின் வாழ்வில் மகிழ்ச்சியினை கொடுக்கிறது என கோவை கங்கா மருத்துவமனையின் கன்சல்டன்ட் ஆன்கோபிளாஸ்டிக் சர்ஜன் மற்றும் அஸ்த்தெடிக் சர்ஜன் ராஜா சண்முக கிருஷ்ணன் கூறினார்.



குனியமுத்தூரில் செயல்படும் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுகலை சமூகப் பணித்துறை, பெண்கள் கூட்டமைப்பு, ஆங்கிலத்துறை மற்றும் ஆரோக்கிய குழு இணைந்து தசை மற்றும் தோல்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை சமீபத்தில் நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு கோவை கங்கா மருத்துவமனையின் கன்சல்டன்ட் ஆன்கோபிளாஸ்டிக் சர்ஜன் மற்றும் அஸ்த்தெடிக் சர்ஜன் ராஜா சண்முக கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தசை மற்றும் தோல் தானத்தினைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துப் பேசினார்.



இதில் இவர் கூறியதாவது :- உடலின் பிற உறுப்புகளை தானம் செய்வது போல தசையினையும், தோலினையும் தானம் பண்ணமுடியும். உலகில் தசை தான விழிப்புணர்வு இன்னும் அனைத்து பிரிவினரிடம் செல்லவில்லை. ரத்த தானம் மற்றும் உறுப்புகள் தானம் அளிப்பது போல, தசை தானமும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் தசை மற்றும் தோல் தானத்தினை அளிக்கமுடியும். தசை தானத்திற்கு உச்சவயது வரம்பு எதுவும் இல்லை. ஒரு நபர் இறந்த 6 மணி நேரத்திற்குள் தோல் தானம் பண்ணமுடியும். உரிய ஒப்புதலுடன் தானம் பெறப்படுகிறது. யாரும் தசை மற்றும் தோல் தானத்தினைக் கொடுக்க முடியும். அதேபோல, தானம் பெறுபவர்களுக்கு மற்ற உறுப்புகளைப் பொருத்துவதுபோல எந்த பரிசோதனையும் செய்வதில்லை. கொடையளித்த தோல் மற்றும் தசையினை யாருக்கும் பொறுத்த முடியும். இதை மற்றவர்களுக்காக சேர்க்கும் பொழுது எந்த பொருத்தமும் பார்ப்பதில்லை. தானம் பெரும் தசை ஐந்து வருடங்களுக்கு தோல் வங்கியில் முறைப்படி பதப்படுத்த முடியும். 

உலகில் 80 சதவீதம் பெண்கள் மற்றும் குழந்தைகள் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். தீக்காயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விபத்தினால் தோல் தசை பாதிப்பு அடைந்தவர்களுக்கு தசை மற்றும் தோலினை பொறுத்த முடியும். 



ஒவ்வொரு வருடமும் உலகில் 39,000 நபர்களிடம் இருந்து தோல் தானம் பெற்று 1.75 மில்லியன் தசை தானம் நடைபெறுகிறது. ஒரு நபர் அளிக்கும் தானம் 75 நபர்களின் வாழ்வில் மகிழ்ச்சியினை கொடுக்கிறது. மார்பக புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தசையினை பொருத்தி இழந்த மார்பகங்கள் உருவாக்கப்படுகிறது. மார்பகப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் மார்பகங்களைப் பொறுத்த முடியும். பெண்கள் இதற்காக இனிப் பயப்பட வேண்டாம்.2 மார்பகப் புற்று வந்து இழந்த மார்பகங்களை அந்த நபரின் தசையினை எடுத்து மீண்டும் கொண்டு வரமுடியும். தசை அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து தசை எடுத்து இழந்த மார்பகங்களை உருவாக்க முடியும். அடிவயிற்று பகுதியில் உள்ள தசைகளை எடுத்து பொருத்தலாம். இதனால், எடுத்தப் பகுதியில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படாது, எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் இக்கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி கே.சுந்தரராமன், முதல்வர் பி.பேபி ஷகிலா, சமுகப்பணித்துறை தலைவர் அழகர்சாமி, விரிவுரையாளர்கள் சுமிதா ஷாலினி, லலிதா, மாணவ-மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...