திருப்பூர் : திருப்பூர் போக்குவரத்து பணிமனையில் நடத்துநர்கள் பயணிகளிடம் பத்து ரூபாய் நாணயங்கள் பெறக்கூடாது என ஒட்டப்பட்டிருந்த சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது

திருப்பூர் போக்குவரத்து பணிமனை இரண்டாவது மண்டலத்தில் நடத்துனர்கள் பயணிகள் தரும் பத்து ரூபாய் நாணயங்கள் வாங்குவதை முடிந்தவரை தவிர்க்குமாறு ஒட்டப்பட்டிருந்த சுற்றறிக்கை கடந்த 21-ஆம் தேதி ஒட்டப்பட்டிருந்தது. இந்த சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து பொதுமக்கள் மத்தியில் 10 ரூபாய் நாணயங்களை பயன்படுத்துவது குறித்த சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில், அந்த சுற்றறிக்கையை என்று திரும்பப் பெறப்பட்டது .

இது குறித்து திருப்பூர் போக்குவரத்து பணிமனை இரண்டாவது மண்டல மேலாளர் தனபால் தெரிவித்தபோது, “வங்கியில் பணம் செலுத்தும் போது ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க அவ்வாறு சுற்றறிக்கை ஒட்டப்பட்டிருந்தது. ஆனால், அது பொது மக்களிடம் தவறான கருத்தை பதிவு செய்து அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்ததால் அதனை திரும்பப் பெற்றோம்,” என தெரிவித்தார்.