2, 3 சக்கர வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றும் திட்டத்தை வகுக்க 2 வாரம் மட்டுமே அவகாசம்: நிதி ஆயோக் வலியுறுத்தல்

டெல்லி : பெட்ரோல் டீசலில் இயங்கும் 2 மற்றும் 3 சக்கர வாகனங்களை மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களாக மாற்றுவதற்கான திட்டம் என்ன என்பதை 2 வாரங்களுக்குள் தெரிவிக்கும்படி வாகன உற்பத்தியாளர்களிடம் நிதி ஆயோக் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லி : பெட்ரோல் டீசலில் இயங்கும் 2 மற்றும் 3 சக்கர வாகனங்களை மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களாக மாற்றுவதற்கான திட்டம் என்ன என்பதை 2 வாரங்களுக்குள் தெரிவிக்கும்படி வாகன உற்பத்தியாளர்களிடம் நிதி ஆயோக் அறிவுறுத்தியுள்ளது.

இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான புதிய தொழில் நிறுவனங்களின் கூட்டம் டெல்லியில் நிதி ஆயோக் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களான பஜாஜ் ஆட்டோ மேலாண்மை இயக்குனர் ராஜீவ் பஜாஜ், டி.வி.எஸ். மோட்டார் தலைவர் வேணு சீனிவாசன், ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மினோருடு கடோ மற்றும் சவுத் இந்தியன் ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இயக்குனர் ஜெனரல் விஷ்ணு மாத்தூர், ஆட்டோமொபைல் வாகனங்களுக்கான உதிரிபாக உற்பத்தியாளர் சங்கத்தின் இயக்குனர் ஜெனரல் வின்னி மேதா மற்றும் பலர் கூட்டத்தில் பங்கு கொண்டனர். நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் ஆகியோர் ஆகியோரும் கூட்டத்தில் பங்கு கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிதி ஆயோக் நிர்வாகிகள், பெட்ரோல் டீசலில் இயங்கும் இரண்டு மூன்று சக்கர வாகனங்களால் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றங்கள் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு தடை உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று கூறினர். மூன்று சக்கர வாகனங்கள் அனைத்தும் 2023-ம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களாக மாற்றப்பட வேண்டும் என்று நிதி ஆயோக் திட்டமிட்டிருக்கிறது. அதேபோல் இருசக்கர வாகனங்கள் எல்லாம் 2025ம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களாக மாற்றப்பட வேண்டும் என்று நிதி ஆயோக் திட்டம் வகுத்துள்ளது. இருசக்கர வாகனங்களை பொருத்தமட்டில் 150சிசி குறைவான கொள்ளளவு உள்ள எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதாக நிதி ஆயோக் கூறுகிறது.

பெட்ரோல் டீசல் வாகனங்கள் எல்லாம் மிக விரைவாக மின்சார வாகனங்களாக மாற்றப்பட வேண்டும் என்று அரசு விரும்புகிறது என ரிவோல்ட் இண்டெலி கார் நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் சர்மா கூறினார். ராகுல் சர்மாவின் கருத்து குறித்து தங்கள் எண்ணத்தை கூற வேணு சீனிவாசன் மற்றும் பஜாஜ் மறுத்துவிட்டனர்.

மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் ஆறாவது தர நிலைக்கு தங்களை மேம்படுத்திக்கொள்ள கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் எங்களுக்கு பெட்ரோல் டீசல் வாகனங்கள் வேண்டாம். மின்சார வாகனங்கள் மட்டுமே வேண்டும் என்று கூறுவது தொழில்துறையில் கடுமையான பின்னடைவை உருவாக்கும் என பிரபலமான உற்பத்தியாளர்கள் வலியுறுத்திக் கூறினார்கள். மின்சார வாகனங்கள் வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை ஆனால் அதற்கு தெளிவான கொள்கை மற்றும் அமல்படுத்துவதற்கான திட்டம், அதற்கு உரிய கால அவகாசம் ஆகியவை குறித்து விரிவாக விவாதித்து இறுதி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும், எனக் கூறினர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...