பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்கள் 20 வார காலத்துக்குட்பட்ட கருவை கலைக்க மருத்துவக்குழுவை நாட வேண்டிய அவசியமில்லை

சென்னை : பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் 20 வார காலத்துக்குட்பட்ட கருவை கலைக்க மருத்துவக்குழுவையோ, நீதிமன்றத்தையோ நாட வேண்டிய அவசியமில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை : பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் 20 வார காலத்துக்குட்பட்ட கருவை கலைக்க மருத்துவக்குழுவையோ, நீதிமன்றத்தையோ நாட வேண்டிய அவசியமில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நவீத் அஹமத் என்ற இளைஞர் எனது மகளுடன் செல்லிடப்பேசியில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை காட்டி மிரட்டி பல மாதங்காக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த வருகின்றனர். இந்த நிலையில், எனது மகளின் வயிற்றில் உள்ள கருவைக் கலைக்க போலீஸாரும் மருத்துவர்களும் அலைகழித்து வருகின்றனர். எனவே, இந்த வழக்கின் விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் சட்டப்படி 20 வார காலத்துக்கு மேற்பட்ட கருவைக் கலைக்க மட்டுமே மருத்துவக்குழுவின் ஆலோசனைகளைப் பெற வேண்டும், நீதிமன்றத்தை நாட வேண்டும். 20 வார காலத்துக்குட்பட்ட கருவைக் கலைக்க பாதிப்பட்ட பெண்கள் மருத்துவக்குழுவையோ, நீதிமன்றத்தையோ நாட வேண்டிய அவசியமில்லை. மேலும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான கருக்கலைப்பு செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக அனைத்து போலீஸாருக்கு தமிழக காவல்துறை டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதே போன்று, கருக்கலைப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள், மத்திய அரசு சட்டங்கள் குறித்து மருத்துவர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...