கோவை : வெண்பன்றி உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பன்றி காய்ச்சல் என்ற பெயரில் பன்றி என்ற வார்த்தையை நீக்க பரிசீலனை செய்து வருவதாக கோவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை : வெண்பன்றி உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பன்றி காய்ச்சல் என்ற பெயரில் பன்றி என்ற வார்த்தையை நீக்க பரிசீலனை செய்து வருவதாக கோவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பன்றி காய்ச்சல் என்ற பெயரால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வெண்பன்றி உற்பத்தியாளர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பாக, பன்றி காய்ச்சல் என்ற பெயரில் வரும் பன்றி என்ற பெயரை நீக்க உள்ளாட்சித் துறை அமைச்சர், சுகாதார துறை அமைச்சர் ஆகியோருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் முதல்வரை இதுதொடர்பாக சந்திக்கப்படும் என கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசியதாவது :- பன்றியால் இந்த காய்ச்சல் ஏற்படவில்லை என்று சுகாதாரத் துறை தெளிவுப்படுத்தி உள்ளது. பன்றி காய்ச்சல் என்ற பெயரால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வெண்பன்றி உற்பத்தியாளர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு உள்ளது. பன்றி காய்ச்சல் என்ற பெயரில் வரும் பன்றி என்ற பெயரை நீக்க உள்ளாட்சித் துறை அமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவையில் நடைபெறுகின்ற வெண்பன்றி தொடர்பான கண்காட்சியில் 250 பண்ணையாளர்கள் 25 மாவட்டங்களில் இருந்து கலந்துக்கொண்டு உள்ளது.

சிறு, குறு விவசாயிகள் கூட வெண்பன்றி வளர்ப்பில் ஈடுபட்டால் அதிக லாபம் பெறலாம் என்ற அடிப்படையில், இந்த கண்காட்சி நடக்கிறது. பண்ணையாளர்களுக்கு வெண்பன்றி வளர்ப்பு தொடர்பான பயிற்சியும் கண்காட்சியில் வழங்கப்படுகிறது.

மேலை நாடுகளில் வெண்பன்றிக்கு மதிப்பு அதிகம் என்பதால் தமிழகம், கேரளாவில் வெண்பன்றி வளர்ப்பு அதிக அளவில் இருப்பதால், அதனின் உற்பத்தியை பெருக்கி, வாங்கும் நுகர்வோர்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த இதுபோன்ற கண்காட்சி நடத்தப்கிறது.

உள்ளாட்சித் துறை அமைச்சரின் பரிந்துரையின்படி நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் கிராமப்புற பகுதிகளில் இருந்து பேரூராட்சிகளுக்கு விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. கால்நடை துறையில் தேசிய அளவில் தமிழகம் முதன்மையாக உள்ளது. தெற்காசியாவில் கால்நடை பூங்கா சேலத்தில் அமைக்கப்பட்டு, விரைவில் முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்படும். உலகத்திலுள்ள எந்தெந்த நாடுகளில் கால்நடை சம்மந்தமான படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் இங்கு வந்து தங்கி, உள்நாட்டு, வெளிநாட்டு கால்நடைகளையும் அதனை கொண்டு செய்யப்படும் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் பூங்காவில் நடைபெற்று வருகிறது. விவசாயிகளும் இந்த பூங்காவை பயன்படுத்தி லாபம் ஈட்டலாம். அடுத்தக்கட்டமாக பெரிய அளவில் அனைத்து கால்நடைகள் சம்மந்தமான கண்காட்சி கோவையில் நடைபெறவுள்ளது. தீவன தட்டுப்பாடு தொடர்பாக ஆங்காங்கே இருக்கும் கால்நடை மருத்துவர்கள் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர், என குறிப்பிட்டார்.