நீலகிரி : தமிழகத்தில் நிலவும் கடும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க தவறியதாகக் கூறி ஆளும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்து நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. அரசின் மெத்தனத்தாலும், நீர்நிலைகள் முறையாகப் பராமரிக்காத காரணத்தாலும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய அ.தி.மு.க. அரசு தவறியதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், நீர்நிலைகளை பராமரிக்காத அ.தி.மு.க. அரசைக் கண்டித்து நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பா. முபாரக் தலைமையில் உதகை ஐந்து லாந்தர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் 300-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டு அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.