கோவையில் நடைபெற்ற மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாமில் 283 பேருக்கு பணி நியமன ஆணை

கோவை : கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மகளிருக்கான சிறப்பு தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாமில் 283 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

கோவை : கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மகளிருக்கான சிறப்பு தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாமில் 283 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இனன்று நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஆ. ஜோதிமணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்தூரி, கோவை மாதிரி தொழில்நெறி வழிகாட்டும் மையம் தொடர்பான அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது :- கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசுப்பணி வேலை 2,24,947 நபர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 1,24,333 மகளிர் பதிவு செய்துள்ளனர். இவ்வலுவலகத்தில் மாதிரி தொழில் நெறி வழிகாட்டும் மையம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வலுவலகம் மூலமாகப் பதிவு செய்தல், புதுப்பித்தல், கூடுதல் கல்வித் தகுதி பதிவு செய்தல், முன்னுரிமை பதிவு செய்தல், முகவரி மாற்றம், பரிந்துரை போன்ற வழக்கமான பணிகளுடன் மனுதாரர்களுக்கு வாரந்தோறும் தினம் ஒரு தலைப்பின் கீழ் திறன்மிகு திங்கள், சேவை செவ்வாய், போட்டித்தேர்வு புதன், விழிப்புணர்வு வியாழன், மற்றும் வேலைவாய்ப்பு வெள்ளி போன்ற வழிகாட்டும் பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தவிர அவ்வப்போது மாபெரும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்முகாம்கள் மூலம் தனியார் துறையில் பணியமர்த்தப்படும் பதிவுதாரர்களது பதிவெண்கள் ரத்து செய்யப்படமாட்டாது. கடந்த ஆண்டில் (2018-19)ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் மொத்தம் 3,232 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், போட்டித்தேர்வுகளுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கும் வகையில் இவ்வலுவலகத்தில் தன்னார்வ பயிலம் வட்டம் மூலம் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டில் 39 பேர் பல்வேறு போட்டித் தேர்வுகளில் இவ்வலுவலத்தில் பயிற்சி பெற்று அரசு பணி பெற்றுள்ளனர். மேலும், கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு அரசு கல்லூரிகளில் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 

இவ்வாறு பல்வேறு வகைகளில் பதிவுதாரர்களுக்கு பயனளிக்கும் வண்ணம் தொழில்நெறி வழிகாட்டும் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்முகாமில் 44 முன்னணி தனியார் துறை வேலையளிப்பவர்களும், 519 பணி நாடுநர்கள் கலந்து கொண்டு 283 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. 63 நபர் திறன் பயிற்சி பெற தங்களது விருப்பத்தினை தெரிவித்துள்ளார்கள், இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...