காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தால் மருதமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அச்சம்

கோவை : மருதமலை பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் காட்டுப் பன்றிகளால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.


கோவை : மருதமலை பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் காட்டுப் பன்றிகளால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.

அருள்மிகு முருகப் பெருமானின் ஏழாம் படை வீடு என கருதப்படுவது கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில். இத்திருக்கோவிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வந்து பெருமானை தரிசித்து செல்கின்றனர். மருதமலை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்து இருப்பதால் அங்கு அவ்வப்போது யானை, காட்டெருமை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளும் வந்து செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.



இந்த நிலையில், காட்டுப்பன்றிகள் கோவிலுக்கு செல்லும் சாலையில் சாதாரணமாக சுற்றித் திரிவதும், சாலையோரங்களில் பக்தர்களால் வீசப்படும் தின்பண்டங்களை உண்பதும் அன்றாட நிகழ்வாகி இருக்கிறது. இதனால், ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடுமோ என பக்தர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், காட்டுப்பன்றியை பார்க்கும் சில இளைஞர்கள் அதன் அருகே நின்று செல்பி எடுத்து வருவதால், திடீரென பன்றிகள் தாக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே, வனத்துறையினர் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தை குறைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், பக்தர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.



Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...