மாநில இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்வது குறித்த கடிதம் எதுவும் அனுப்பவில்லை : வெள்ளக்கோவில் சாமிநாதன் பேட்டி

கோவை : பதவியை ராஜினாமா செய்வது குறித்த கடிதம் எதுவும் அனுப்பவில்லை என்றும், உரிய நேரத்தில் தலைவர் சரியான முடிவெடுப்பார் என திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்தார்.

கோவை : பதவியை ராஜினாமா செய்வது குறித்த கடிதம் எதுவும் அனுப்பவில்லை என்றும், உரிய நேரத்தில் தலைவர் சரியான முடிவெடுப்பார் என திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்தார்.

தண்ணீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணத தமிழக அரசைக் கண்டித்து திருப்பூர் மாநகர மாவட்ட தி.மு.க. சார்பில் திருப்பூர் மாநகராட்சி எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலிக்குடங்களுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்தும், தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணாத தமிழக அரசு பதவி விலகக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், முன்னாள் அமைச்சரும், மாநில இளைஞரணி செயலாளருமான வெள்ளக்கோவில் சாமிநாதன் கலந்து கொண்டார். 



அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை உள்ள நிலையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. கேரள அரசு தண்ணீர் தர முன்வந்ததையும், தமிழக அரசு மறுத்துள்ளது கண்டனத்துக்குரியது. இளைஞரணி மாநில செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய கடிதம் அனுப்பப்பட்டதாக வந்த தகவல்களில் உண்மையில்லை,” எனக் கூறினார்.



தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினுக்காக பதவியை விட்டுகொடுப்பீர்களா என்ற கேள்விக்கு, தி.மு.க. தலைவர் உரிய நேரத்தில் சரியான முடிவெடுப்பார், இப்போதைக்கு கடிதம் எதுவும் வழங்கவில்லை என அவர் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...