பருவமழை தாமதத்தால் கல்லார் பழபண்ணையில் மங்குஸ்தான் பழ சீசன் மந்தம்

கோவை : பருவமழை சரிவர பெய்யாததால் கல்லார் பழபண்ணையில் மங்குஸ்தான் பழ சீசன் மந்தமானதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கோவை : பருவமழை சரிவர பெய்யாததால் கல்லார் பழபண்ணையில் மங்குஸ்தான் பழ சீசன் மந்தமானதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாரில் தமிழக அரசின் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான அரசு பழப்பண்ணை உள்ளது. இங்கு மங்குஸ்தான், ரம்பூட்டான், துரியன், மலயன் ஆப்பிள், ஜவரளி உள்ளிட்ட பல்வேறு விதமான அறியவகை பழங்களும் மா, பலா,கொய்யா, எலுமிச்சை, பப்ளி மாஸ் போன்ற பழவகைகளும் உற்பத்தி செய்யப்பட்டு, குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கும் உதகைக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் விற்பனை செய்யபட்டு வருகிறது. இந்த பழப்பண்ணையில் பழங்களின் அரசி எனப்படும் மங்குஸ்தான் பழமரங்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டவை உள்ளன. இதன் சீசன் மே மாதம் முதல் துவங்கி ஆகஸ்ட் மாதம் இறுதி வரை இருக்கும். குளுக்கோஸ் சத்து நிறைந்த மருத்துவ குணம் கொண்ட இந்த பழத்தை வாங்க மக்களிடம் ஆண்டுதோறும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இவ்வாண்டும் போதிய மழையின்மை காரணமாக கல்லார் அரசு தோட்டக்கலை பண்ணையில் மங்குஸ்தான் மரங்களில் காய்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மட்டுமே காணப்படுகிறது. 



எதிர்பார்த்தபடி, தென்மேற்கு பருவமழை பெய்யாததால் நீரின்றி மரங்களில் காய்கள் காய்க்காமல் பட்டுபோனது. மேலும், மரங்களில் பிடித்த பிஞ்சுகளும் வறட்சியால் சிறியதாக இருக்கும் போதே மரத்தில் இருந்து உதிர்ந்து தரையில் கொட்டி வருகின்றன. இதனால், இவ்வாண்டு கல்லாரினை பொறுத்தவரை மங்குஸ்தான் பழ சீசன் இல்லாமலேயே போனதாக கருதப்படுகிறது. மே மாதம் துவக்கத்தில் இருந்தே இங்கு மங்குஸ்தான் பழம் விற்பனைக்கு வரும். ஆனால், இந்த ஆண்டு இதுவரை மங்குஸ்தான் விற்பனைக்கு வராததால் இங்கு பழத்தை வாங்குவதற்காக வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 



மேலும், கடந்தாண்டு இதே மாதத்தில் கல்லார் பழப்பண்ணையில் மங்குஸ்தான் பழம் சுமார் 5 லட்சம் வரை ஏலம் எடுக்கப்பட்டு விற்பனை செய்யபட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...