சாயிபாபாகாலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

கோவை : சி3 - சாயிபாபாகாலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 50 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் காவலர் உடற்பயிற்சி கூடம் தொடக்க விழா நடைபெற்றது.


கோவை : சி3 - சாயிபாபாகாலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 50 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் காவலர் உடற்பயிற்சி கூடம் தொடக்க விழா நடைபெற்றது.

கோவை மாநகரில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு விரைந்து கைது செய்யவும் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகர காவல்துறையின் முயற்சியில் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.



அதேபோல, பழைய காவல் நிலையங்கள் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டும் வருகின்றன. இந்த நிலையில், கோவை சி3 - சாயிபாபாகாலனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 8 லட்சம் மதிப்பீட்டில் 50 கண்காணிப்பு கேமராக்களும், 4.5 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சியும் சாலையும், 16 லட்சம் மதிப்பீட்டில் லிப்ட்டும் அமைக்கப்பட்டுள்ளது.



இதன் துவக்க விழாவானது சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்த துவக்க விழாவில் மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண், துணை ஆணையாளர் சட்டம் ஒழுங்கு பாலாஜி சரவணன், குற்றப்பிரிவு ஆணையாளர் பெருமாள் மற்றும் உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் சாய்பாபா காலனி பகுதியைச் சுற்றியுள்ள சமூக அமைப்பினர் என பலர் கலந்து கொண்டனர். 



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...