திருப்பூர் : நீட் தேர்விற்கு சட்ட வடிவு கொண்டு வரும் போது ஆதரித்த தி.மு.க. தற்போது எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் ராயபுரம் பகுதியில் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்ட மாநகராட்சி நடுநிலைப் பள்ளி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி பள்ளியை திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது :- நீட் தேர்விற்கு சட்டவடிவு கொண்டு வரும் போது ஆதரித்ததே தி.மு.க. இன்று அமல்படுத்தப்பட்டவுடன் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது. தி.மு.க. எம்.பி.க்கள் முயற்சி எடுத்து வெற்றிகரமாக விலக்கு பெற்றால், என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். முன்னாள் முதலமைச்சர் அம்மா இருந்தபோதே நீட் தேர்விற்கு விலக்கு கேட்டு வருகிறோம். தற்போதைய அரசும் பிரதமரிடம் வலியுறுத்தி வருகிறது. தமிழக அரசு பள்ளி கல்வித்துறைக்கு 28,757 கோடியே 33 லட்சம் ஒதுக்கினாலும் கூட இன்னும் பல்வேறு பணிகள் உள்ளன. அதற்காக இதுவரை 102 கோடி வரை பல்வேறு சமூக அமைப்புகள் வழங்கியுள்ளன.

அரசு பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. தரச்சான்று பெற்ற பின்பு தனியார் பள்ளிகள் நடைமுறையைப் பின்பற்றாத நிலை இருந்தால், அவற்றை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு முடிவை பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்திற்கும் 85 சதவிகிதம் மருத்துவ படிப்பிற்கான இடம் அந்த மாநிலத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே அந்த சலுகையினை மீறி இடம்பெற முடியும். முழுமையாக வேறு மாநிலத்தவர் பெற முடியாது. பள்ளிகளுக்குப் பாடப்புத்தகங்கள் அனுப்புவதில் தொய்வு ஏற்பட்டது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. மேலும், தனியார் பள்ளிகளும் தமிழக அரசு பாடத்திட்டத்தை அதிகளவில் அச்சிட்டு வருகின்றன. இதன்மூலம், இந்தியாவிலேயே கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது, இவ்வாறு கூறினார்.