மலைவாழ் குழந்தைகளின் கல்வியை நினைவாக்கித் தரும் சிறுவாணி விழுதுகள் அமைப்பினர்

கோவை : மலைவாழ் குழந்தைகளுக்கு எட்டா கனியாகவே இருந்து வரும் கல்வியை, தற்போது நினைவாக்கித் தரும் வகையில் சிறுவாணி விழுதுகள் அமைப்பில் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

கோவை : மலைவாழ் குழந்தைகளுக்கு எட்டா கனியாகவே இருந்து வரும் கல்வியை, தற்போது நினைவாக்கித் தரும் வகையில் சிறுவாணி விழுதுகள் அமைப்பில் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். 

கோவை மாவட்டம் மத்வராயபுரம் ஊராட்சி, நொய்யலின் பிறப்பிடமான சிறுவாணியில் உள்ள கல்கொத்தி மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள், மத்வராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-10 வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கல்வியில் மிகவும் பின்தங்கி உள்ளனர். மேலும், இந்த மலைவாழ் கிராம மக்களின் வருவாய் போதிய அளவு இல்லாததால், இவர்களின் குழந்தைகளுக்கு கல்வி பயில நோட்டுகள் மற்றும் வழிகாட்டி புத்தகங்களை வாங்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.



இதையறிந்து, சிறுவாணி விழுதுகள் நண்பர்களின் பங்களிப்புடன் அவர்கள் கல்வி பயில தேவையான அனைத்து உபகரணங்களும் அவர்களுக்கு இன்று காலை தரப்பட்டுள்ளது. 

கடந்த 2 வருடங்களாக ஏழை, எளிய மக்கள் மற்றும் சிறுவாணி வனப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களின் குழந்தைகள் கல்வியறிவு பெற சிறுவாணி விழுதுகள் நண்பர்கள் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, ஒன்பதாம் வகுப்பு இடைநிற்றல் நின்ற ஒரு மாணவி இன்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார் இப்போது, அவர் கல்லூரி செல்ல உதவி கோரியுள்ளார்.



மேலும், இந்த கல்வி ஆண்டு முதல் இந்த மாணவர்களின் கல்வி தடங்கல்களை ஆராய்ந்து அதனை சரிபடுத்தி, ஒவ்வொரு மாணவ, மாணவியர் பயிலும் கல்வியைக் கண்காணித்தும் அவர்கள் பள்ளி கல்வியை முழுவதும் கற்று கல்லூரி கல்வியை முடித்து அவர்களின் வாழ்வினை சிறப்பாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கல்கொத்தி மலைவாழ் கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி கல்லூரிப் படிப்புக்கு உதவியை எதிர்பார்த்து ஒரு மாணவி இருக்கிறார். ஏதாவது வகையில் உதவி செய்ய முன் வருபவர்கள் தொடர்பு கொள்ளவும்..!



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...