தடையை மீறி மீண்டும் செயல்படுவதற்கு எதிராகப் போராடிய மக்களை தாக்கிய சிப்காட் வளாகத்தினர்

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட வருவாய் துறையினரால் செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்த ஆயில் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் முறைகேடாக செயல்பட ஆரம்பித்ததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது ஆயில் நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் : திருப்பூர் மாவட்ட வருவாய் துறையினரால் செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்த ஆயில் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் முறைகேடாக செயல்பட ஆரம்பித்ததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது ஆயில் நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ளது வேப்பம்பாளையம் என்ற கிராமம். இப்பகுதியில் சிப்காட் வளாகமானது அமைந்துள்ளது. ரப்பர் தொழிற்சாலை, ஆயில் சுத்திகரிப்பு நிலையம் போன்றவை இந்த வளாகத்திற்குள் செயல்பட்டு வருகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரச்சான்றுக்கான தேதி முடிவடைந்தும் ஆலைகள் இயங்கி வருவதாகவும், முறைகேடான வகையில் நிலத்தடியை மாசு ஏற்படுத்துவதாகவும் கூறி கடந்த மாதம் இப்பகுதி மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் காங்கேயம் வட்டாட்சியர் மற்றும் தாராபுரம் சப் கலெக்டர் ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.



இந்த ஆயில் தொழிற்சாலையால் சுற்றுவட்டாரப் பகுதிகளின் விவசாய நிலங்கள் மாசடைவதாகவும், பெண்கள் குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்சனைகள் வருவதாகவும் கொடுத்திருந்த புகார் மனுவின் அடிப்படையில் விசாரணை செய்த அதிகாரிகள், ஆயில் சுத்திகரிப்பு ஆலை செயல்பட எழுத்துப்பூர்வமாக தடை விதித்திருந்தனர். 

இந்த நிலையில், நிர்வாகத்தினர் இன்று காலை ஆலை செயல்பட தேவையான பொருட்களை லாரியின் மூலம் ஏற்றி வந்த போது, கிராம மக்கள் லாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆலையின் உரிமையாளர் அருண் மற்றும் அவரது ஆட்கள், காரில் இருந்து இறங்கியதும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை தாக்கியதாகவும், இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆலையின் உரிமையாளர் காரை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆலையின் உரிமையாளர் அருண் தாக்கியதில் காயமடைந்த தண்டபானி என்பவர் தற்போது திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் காவல்துறையினர் இரு தரப்பிடம் இருந்து புகார் மனு வாங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...