மேட்டுப்பாளையத்தில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

கோவை : மேட்டுப்பாளையத்தில் 9-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை : மேட்டுப்பாளையத்தில் 9-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். பெற்றோர்கள் இருவரும் கூலி வேலைக்கு செல்வதால், காலையில் சென்றால் மாலை தான் வீடு திரும்புவர். இந்த நிலையில், மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அதே பகுதியினை சேர்ந்த வினீத் குமார் என்ற வாலிபர் தனிமையில் இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சல் இடவே அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

பின்னர், இரவு வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் மாணவி நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதனையடுத்து, மாணவியின் தாயார் இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையில் புகார் அளித்தார். அதன் பேரில், விசாரணை நடத்திய அனைத்து மகளிர் காவல்துறையினர் மாணவியிடம் அத்துமீறி பாலியில் சீண்டலில் ஈடுபட்ட வினீத் குமார் என்ற வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...