கோவை : அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்று நாட்களாக நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் (ஜமபந்தி) பெறப்பட்ட 182 மனுதாரர்களுக்கு உடனடித் தீர்வாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது !!!

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இன்று வரை வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்று வருகின்றது. கோவை மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அவை கொண்டுள்ள உள்வட்டங்களின் அடிப்படையில் கிராமங்களில் உள்ள பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவற்றின் தகுதிகளின் அடிப்படையில் உடனடித் தீர்வு காணப்படுகின்றது.
அதன்படி, அன்னூர் வட்டத்தில் மூன்று நாட்களாக நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் தீர்வாய அலுவலராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, பொகலூர், குப்பனூர், அக்கரை செங்கப்பள்ளி, ஒட்டர்பாளையம், கணுவக்கரை, ஆம்போதி, அல்லப்பாளையம், அன்னூர்-மேட்டுப்பாளையம், கஞ்சப்பள்ளி, வடக்கலூர், பசூர், வடவள்ளி, காரேகவுண்டம்பாளையம், குப்பேபாளையம், காட்டம்பட்டி, குன்னத்தூர், பச்சாபாளையம், நாரணாபுரம், மசக்கவுண்டன் செட்டிபாளையம், கரியாம்பாளையம், பிள்ளயப்பம்பாளையம், அன்னூர், வெள்ளமடை, அக்கரஹாரசாமக்குளம், இடிகரை, கீரணத்தம், கொண்டயம்பாளையம், சர்;க்கார்சாமக்குளம், கள்ளிப்பாளையம், மற்றும் வெள்ளணைப்பட்டி ஆகிய 30 வருவாய் கிராமங்களிலுள்ள பொதுமக்களிடமிருந்து 1,816 மனுக்களைப் பெற்றுக்கொண்டு, 182 மனுக்களுக்கு அதன் தகுதிகளின் அடிப்படையில் உடனடித் தீர்வுகளை வழங்கினார்.
ஏனைய மனுக்கள் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்கள் மேல்நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். வருவாய் தீர்வாயத்தின் தொடர் நிகழ்வாக இன்று மாவட்ட ஆட்சியர் வட்ட வருவாய் நிர்வாகத்தின் கணக்குகள், நிலக்கோப்புகள் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், மற்றும் வட்டாட்சியர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பெறப்பட்ட மனுக்களுக்கான தீர்வினை விரைந்து வழங்கும்படியும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இவ்வாய்வில், வட்டாட்சியர்கள் ஆர். வசந்தாமணி, முரளி, ரங்கராஜ், ராஜன் உள்ளிட்ட வருவாய் ஆய்வாளர்கள். கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.