கோவையில் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை எரிக்க முயன்ற மாணவர் அமைப்பினர் கைது

கோவை : புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் வைத்து எரிக்க முயன்ற புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை : புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் வைத்து எரிக்க முயன்ற புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர்.



புதிய கல்வி கொள்கை குறித்த வரைவு நகலை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ளது. இது குறித்த கருத்தை ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்கிற கால அவகாசத்தை வழங்கியுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய கல்விக் கொள்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் இக்கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புரட்சிகர மாணவர்-இளைஞர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையிலும், பேருந்து நிலையத்தில் வைத்து கல்விக் கொள்கையின் வரைவு நகலை எரிக்க முயன்றனர். அப்போது, அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை குண்டுக்கட்டாக வேனில் ஏற்றி கைது செய்தனர்.

மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...