கோவை : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இன்று கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முதன்மையர் (வேளாண்மை) கு. கல்யாணசுந்தரம், நமது அன்றாட வாழ்க்கையில் யோகாவின் வரலாற்று முக்கியத்துவம் பற்றியும், எந்தவொரு கவனச்சிதறலும் இன்றி வாழ்க்கையில் நம் லட்சியங்களை அடைய யோகாவின் பயனை அவர் விளக்கினார். தொடர்ந்து, கோவை மண்டல உலக சமூக சேவை மைய துணைத் தலைவர் டாக்டர். ஆர் ரவீந்திரநாத் மற்றும் விஷன் அகாடமி நிர்வாக இயக்குனர் ராமமூர்த்தி ஆகியோர் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.

பின்னர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 200 இளங்கலை மாணவர்கள் மற்றம் பிற பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மாணவர்கள் வெவ்வேறு யோகா பயிற்சிகள் மற்றும் சிறப்பு ஆசனங்களை செய்து காட்டினர்.