ஆசியாவின் மிகப்பெரிய சர்க்கஸ் ஆன ஜம்போ சர்க்கஸ் கோவையில் நாளை தொடக்கம்

கோவை : ஆசியாவின் மிகப்பெரிய சர்க்கஸான ஜம்போ சர்க்கஸ் கோவையில் வ.உ.சி. மைதானத்தில் நாளை முதல் 40 நாட்களுக்கு நடக்கிறது.


கோவை : ஆசியாவின் மிகப்பெரிய சர்க்கஸான ஜம்போ சர்க்கஸ் கோவையில் வ.உ.சி. மைதானத்தில் நாளை முதல் 40 நாட்களுக்கு நடக்கிறது. 

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. சர்க்கஸ் நிகழ்ச்சி குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது :- நாளை துவங்கும் இந்த சர்க்கஸ் அடுத்த 40 நாட்களுக்கு நடைபெறும். துவக்க விழாவில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன்.அர்ஜுனன், வீடியோ ஸ்பெக்ட்ரம் உரிமையாளர் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளனர். தினமும் மதியம் 1 மணி, மாலை 3 மணி, இரவு 7 மணி என மூன்று காட்சிகள் நடைபெறும். ரூ. 100 - முதல் ரூ. 400 வரையில் நான்கு வகையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



மேலும், முன்பதிவு செய்ய விரும்புவார்கள் [email protected] என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், ஒரு காட்சியில் 1,500 பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில், வெளிநாட்டு கலைஞர்கள் உள்பட 150 கலைஞர்கள் பங்கேற்க இருக்கின்றனர். ரங்க ராட்டினம், ரிங் டான்ஸ், துப்பாக்கி சுடுதல், குதிரை சாகசம் என பல்வேறு சாகசங்களைக் கலைஞர்கள் நிகழ்த்த உள்ளனர். இது பார்வையாளர்கள் கண்களுக்கு விருந்தாக அமையும், என்றனர்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, வீடியோ ஸ்பெக்ட்ரம் உரிமையாளர் செல்வராஜ், சைக்கிள் கலைஞர் ஜானகி, துப்பாக்கி சுடும் கலைஞர் ஷாந்து பாண்டே, கிளிகள் சாகச கலைஞர் ரீனா குப்தா, மேலாளர் தினேஷ், செய்தி தொடர்பாளர் சுபா.சுப்ரமணியம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...