தூத்துக்குடியில் நிருபர் மீதான தாக்குதலைக் கண்டித்து கோவையில் பத்திரிக்கையாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவை: தூத்துக்குடியில் பாலிமர் தொலைக்காட்சி நிருபர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கோவை மாவட்ட அனைத்து பத்திரிகையாளர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: தூத்துக்குடியில் பாலிமர் தொலைக்காட்சி நிருபர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கோவை மாவட்ட அனைத்து பத்திரிகையாளர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



செய்தி பதிவிட்டதற்காக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் பாலிமர் நியூஸ் தொலைக்காட்சி நிருபர் முத்துவேல் மீது கூலி படையினரால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு பத்திரிகையாளர் சங்க அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 



இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பினர் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகள் தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், முத்துவேல் மீது தாக்குதல் நடத்த தூண்டிய காவல் ஆய்வாளர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...