கோவை : தமிழக முதலமைச்சரின் இரத்ததான திட்டத்தின் கீழ் கோவை மாநகர காவல்துறை சார்பில் கோவை புதூர் அருகே 600-க்கும் மேற்பட்ட போலீசார் ஆர்வத்துடன் இரத்த தானம் செய்தனர்.

ஆபத்தான சூழலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு தேவைப்படும் இரத்தத்தை மற்றொரு சக மனிதர் தானமாக அளிப்பது இரத்ததானம் ஆகும். அதேபோல, இன்றைய காலகட்டத்தில் இரத்தத்தின் தேவைகள் அதிகமாக உள்ள சூழலில், இரத்த கொடையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த இரத்த கொடையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களும் விழிப்புணர்வு நிகழ்வுகளை ஆண்டு முழுவதும் நடத்தி வருகின்றனர். இந்த விழிப்புணர்வின் பயனாக ஆண், பெண் என பாகுபாடுகள் இன்றி அனைவரும் இரத்ததானம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் இரத்ததான திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் இரத்த தானம் செய்யப்படுகிறது. குறிப்பாக, தமிழக காவல்துறையின் சார்பில் தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று ரத்த தானம் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர காவல்துறை சார்பில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் கோவை புதூரில் உள்ள சிறப்பு காவல் படை முகாமில் இரத்த தானம் செய்தனர். இந்த இரத்ததான முகாமினை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் டாக்டர் அசோகன் மற்றும் துணை ஆணையாளர் எல். பாலாஜி சரவணன் ஆகியோர் துவங்கி வைத்தனர்.

அதேபோல, காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் எல். பாலாஜி சரவணன் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும் ஆர்வத்துடன் இரத்ததானம் செய்தனர்.