கோவை : சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு பி.எஸ்.ஜி. கல்வி குழுமம் சார்பில் நடந்த யோகா நிகழ்ச்சியில் 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாவை செய்து மகிழ்ந்தனர்.

பி.எஸ்.ஜி கல்வி குழுமம் சார்பில் சர்வதேச யோகா தினத்தை காலை 6.30 மணிக்கு பி.எஸ்.ஜி விளையாட்டு மைதானத்தில் கொண்டாடின. பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் கீழ் பல்வேறு நிறுவனங்களின் மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் அனைவரும் பிராணயாமா, குண்டலினி யோகா பயிற்சிகள் மற்றும் யோகாசனங்கள் செய்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர். இதில், 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உடற்பயிற்சிகள் மற்றும் ஆசனங்களைச் செய்தனர்.
இயற்கை மற்றும் யோகா சார்ந்த மருத்துவர்கள் எம்.ஹரிணி மற்றும் எம்.கற்பக ராஜ்குமார் ஆகியோரால் மாணவர்கள் வழி நடத்தபட்டார்கள். பி.எஸ்.ஜி நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்னன் மற்றும் அறக்கட்டளை நிறுவனர் ஜி.ஆர்.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவ இயக்குனர் டாக்டர்.ஜே.எஸ்.புவனேஷ்வர் (சூப்பர் ஸ்பெஷல்டி) தலைமை தாங்கினார்.
கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன்(காவல்துறை துணை ஆணையர்) சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். இவர் உடல் நலம் மற்றும் நல்வாழ்வை அடையவதற்கான முறையை முன்னெடுப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்கு ஆற்றுகின்றனர் என பாராட்டினார். தினசரி யோகா பயிற்சி நம்மை காலநிலை நடவடிக்கை என்ற கருப்பொருளை நோக்கி அழைத்து செல்லும் என்று அவர் வலியுறுத்தினார்.