கோவை : கோவை மாவட்டம் தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தின் சார்பில் நடைபெற்று வரும் வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் பயிற்சி பெறுபவர்களுக்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் வழங்கினர்.
கோவை : கோவை மாவட்டம் தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தின் சார்பில் நடைபெற்று வரும் வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் பயிற்சி பெறுபவர்களுக்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் வழங்கினர்.
குரும்பம்பாளையம் ஆதித்யா கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தின் சார்பில் தமிழ்நாடு வன சீருடை பணியாளர்கள் தேர்வு குழுமத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்களுக்கு 6 மாத கால பயிற்சி நடைபெற்று வருகின்றது. இன்று இப்பயிற்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி வனக் பாதுகாவலர்களுக்கு பயிற்சி உபகரணங்களையும் பயிற்சி கையேடுகளையும் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், கந்தசாமி முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் பெ.துரைராசு, மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தமிழ்நாடு வன உயர் பயிற்சியகம் முதல்வர் அன்வர்தீன், தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் கூடுதல் இயக்குநர் திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இப்பயிற்சி முகாமில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது :- தென்மேற்கு வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனதால் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள வன உயிரினங்கள் காட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலையைத் தடுக்க அப்பகுதியில் உள்ள நீராதாரங்களைப் பெருக்கவும், வனப்பகுதிகளிலும் வன உயிரின வாழ்விடப் பகுதிகளிலும், நீர்நிலைகளில் நீர் நிரப்புதல், புதிய நீர் ஆதாரங்களை ஏற்படுத்துதல், கசிவு நீர்க் குட்டைகள் தடுப்பணைகளை தூர்வாரி பராமரித்தல், சூரிய சக்தியின் மூலம் ஆழ்துளைக் கிணறுகள் உருவாக்கி நீராதாரங்களை பெருக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல, வனப்பகுதியில் தீ ஏற்படாமலும், தீ பரவாமலும் இருக்க தீ தடுப்பு பணிகள் பிரச்சினைக்குரிய வன விலங்குகளால் ஏற்படும் மனித - உயிரினம் மோதல்களை தவிர்க்க வேட்டை தடுப்பு காவலர்களைக் கொண்டு வனவிலங்குகளை திருப்பி அனுப்புதல் போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது
கோவை மாவட்டத்தில் மனித யானை முரண்பாட்டை கட்டுப்படுத்த விவசாயிகள் கூட்டமைப்பு உள்ளூர் பொதுமக்கள் ஆகியவர்களுடன் இணைந்து மாணவர்கள், விவசாயிகள், வருவாய், காவல்துறை, விவசாயத்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஊராட்சி அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து சிறப்பாக களிறு திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது கோவை மாவட்டத்தில் வனத்துறை மருத்துத்துவர்கள் நியமனம் செய்ய கால்நடை பராமரிப்புத்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மரம் வெட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் வறட்சி என்றாலும் கூட நுட்பமாக அணுகி தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படுகின்றது. இதுபோல, மக்களின் நலத்திட்டங்கள் தொடர்ந்து அம்மா அவர்களின் அராசால் தொடர்ந்து செயல்படுத்தப்படும், என கூறினார்.
தொடர்ந்து, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- கோவையில் இந்த பயிற்சி வகுப்புகள் குரும்பப்பாளையம் ஆதித்யா பொறியியல் கல்லூரியிலும், கோவில்பாளையம் இன்போ பொறியியல் கல்லூரியிலும், கிணத்துக்கடவு அக்ஷயா பொறியியல் கல்லூரியிலும் மார்ச் 28-ந் தேதி முதல் வனக்காப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. தற்சமயம், 597 வனக்காப்பாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அம்மாவின் எண்ணத்தினை பிரதிபலிக்கும் விதமாக கிராமங்கள்
தோறும் பசுமையாக்க மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு கிராமங்களில் அரசு நர்சரிகள் பராமரிக்கப்பட்டு, மரக்கன்றுகள் வினியோகிக்கப்பட்டு வருகின்றது. நாம் வனத்தினை தேடிச் செல்லாமல் நம்மை சுற்றியிருக்கும் பகுதிகளில் மரங்களை நட்டு வனப்பகுதிகளை உறுவாக்கிடுவோம் என்று உறுதியேற்போம்.
அம்மாவின் அரசு வனங்களை பாதுகாக்க எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருந்து, கடமைத் தவறாமல் வன வளங்களை பாதுகாத்து நாட்டிற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன், என்றார்.
முன்னதாக, இப்பயிற்சி பெறும் வனவர்கள் மற்றும் வனப்பாதுகாவலர்களின் சீருடை அணிவகுப்பும், கராத்தே, டேக்வாண்டோ, சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகளின் சாகசங்களும், பிரமிடு அமைப்புகளிலும் நின்று காண்பித்தனர். தொடர்ந்து, பயிற்சி பெறும் வனவர்களுக்கு டார்ச்லைட்டுகள் போக் மற்றும் பயிற்சி புத்தகங்களும் வழங்கப்பட்டது. மேலும், அரசின் வனக்கொள்கையும், வனச்சட்டங்களும் வனக்காப்பாளர்களின் கடமைகளும் என்ற புத்தகத்தினை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வெளியிட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெற்றுக் கொண்டார்.