திருப்பூர் : தந்தையின் இறப்புச் சான்றிதழ் வழங்க அலைக்கழித்ததால் அதிருப்தியடைந்த ஒருவர் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய நிலையில், கிராம நிர்வாக அலுவலர் அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நாரணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவர் தனது தந்தை பாலசுப்பிரமணியின் இறப்பு சான்றிதழ் வழங்கக் கோரி கடந்த ஒரு மாதமாக அலைந்து வந்துள்ளார். ஆனால், கிராம நிர்வாக அலுவலர் வழங்காமல் அலைக்கழித்ததால் ஆத்திரமடைந்த சுந்தரேசன், நாரணாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி, அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதுடன், இறப்பு சான்றிதழ் விரைவாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, சுந்தரேசன் போராட்டத்தைக் கைவிட்டார்.