சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா சார்பில் உலகம் முழுவதும் 1,500 இடங்களில் இலவச யோகா வகுப்புகள்

5-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மையம் சார்பில் உலகம் முழுவதும் சுமார் 1,500 இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நாளை நடைபெற உள்ளன.

5-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மையம் சார்பில் உலகம் முழுவதும் சுமார் 1,500 இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நாளை நடைபெற உள்ளன.

ஈஷா யோகா மையம் சார்பில் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, உலகம் முழுவதும் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்தாண்டு இந்தியா, அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, ரஷ்யா, ஆப்ரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 1,500 இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற உள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் யோகா வகுப்புகள் நடைபெற உள்ளன. இதில், ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை கடந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், இந்திய ராணுவ வீரர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என பலத் தரப்பைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு யோகா ஆசிரியர்கள் மூலம் ‘உப-யோகா’ என்ற யோகா பயிற்சி சொல்லிக் கொடுக்கப்பட உள்ளது.

இதன் ஒருபகுதியாக, அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஃப்ளோட்டிங்  டாக் எனப்படும் இந்திய கடற்படையின் மிதக்கும் துறைமுகத்தில் யோகா தின நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இதில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குமற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தலைமையகத்தின் தலைமை தளபதி,  கடற்படை உதவி தலைவர் பிமல் வர்மா பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில், இந்திய தரைப்படை, கடற்படை, விமானப் படை மற்றும் கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் உட்பட சுமார் 1000 பேருக்கு யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. 

இதை தொடர்ந்து, பிற்பகலில் ராணுவ அதிகாரிகளுடன் சத்குரு கலந்துரையாட உள்ளார். இதுதவிர, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை, புதுச்சேரி உள்ளிட்ட 15 மத்திய சிறைகளில் ஈஷா சார்பில் 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு நாளை யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறை கைதிகளுக்கு ஈஷா சார்பில் யோகா கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...