கோவை : அணுஉலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், 8 வழி சாலை உள்ளிட்ட திட்டங்களை ரத்து செய்யக் கோரி எஸ்.டி.பி.ஐ சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை : அணுஉலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், 8 வழி சாலை உள்ளிட்ட திட்டங்களை ரத்து செய்யக் கோரி எஸ்.டி.பி.ஐ சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு திட்டத்தை செயல் படுத்த முனையும் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் பெரும்பாலும் சாமானிய மக்களை பாதிக்கும் திட்டங்களாகவும், அவர்களது வாழ்வாதாரத்தைக் கொடுக்கும் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்ததாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் கோரிக்கைகளை ஏற்பதில் மாநிலத்துக்கு மாநிலம் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், இதனை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது, மக்கள் போராடினால் மட்டுமே இதனை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும் எனக் கூறிய அவர்கள், வளர்ச்சி என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் இத்தகைய திட்டங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.